பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
Published on

விராலிமலை

விராலிமலை ஊராட்சி ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ஈஸ்வரி (வயது 32). இவரது சகோதரி விஜயலட்சுமி என்கிற ரோகினி (26). இவருக்கு விராலிமலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மதியழகன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வறுபாடு காரணமாக ஈஸ்வரி வீட்டிற்கு விஜயலட்சுமி வந்துள்ளார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com