மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 55). புளி நசுக்கும் தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே ராமக்காள் ஏரி- மதிகோன்பாளையம் சாலையை கடக்க சாலையோரத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சாந்தியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com