நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் பலி


Woman killed after elephant attacks her in TN
x

சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் சரசு(58). இவர் நேற்று மாலை அங்குள்ள பொக்கபுரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த காட்டு யானை, சரசை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்குள்ளவர்கள் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story