மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலியானார்
மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 52). இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரி இன்றி இறந்து விட்டார். இந்நிலையில் சுப்புலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com