மின்சாரம் தாக்கி பெண் பலி

நஞ்சுகொண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமம், மேற்கு கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 55). இவர், மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றுவதற்காக 'சுவிட்ச்' போட்டுள்ளார்.

அப்போது மோட்டார் இயங்காததால் மின் ஓயர் கட்டாகி உள்ளதா? என பரிசோதிக்க மின் ஓயரை கையில் எடுத்து பார்த்து உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com