வாசுதேவநல்லூர் அருகே பஸ் மோதி பெண் சாவு

வாசுதேவநல்லூர் அருகே பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்
வாசுதேவநல்லூர் அருகே பஸ் மோதி பெண் சாவு
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி கிராமம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 60). இவர் நேற்று காலை தனது மனைவி கோவிந்தம்மாளுடன் (55) மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.

வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிபுதூருக்கு சற்று தெற்கே ரைஸ்மில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் முதுகில் தொங்கிய புத்தக பைகள், கோவிந்தராஜன் மீது உரசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் கோவிந்தம்மாள் மீது பஸ்சின் பின்பக்க டயர் ஏறியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பலத்த காயத்துடன் கோவிந்தராஜ் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com