மயிலம் அருகே கார் மோதி பெண் பலி

மயிலம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்தார்.
மயிலம் அருகே கார் மோதி பெண் பலி
Published on

மயிலம்,

மயிலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகஜோதி மனைவி ஸ்ரீ ஆண்டாள்(வயது 65). இவர் தனது மகள் பிருந்தா(35), இவருடைய மகள் அக்ஷயா(13) ஆகியோருடன் ஒரு மொபட்டில் திருவக்கரையில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். மொபட்டை பிருந்தா ஓட்டினார். தென்பசார் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, இவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீ ஆண்டாள் உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டாகள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிருந்தா, அக்ஷயா ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com