மொபட் மீது லாரி மோதி பெண் சாவு

புதுக்கோட்டை அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
மொபட் மீது லாரி மோதி பெண் சாவு
Published on

பெண் பலி

புதுக்கோட்டை அருகே கடையக்குடி சண்முகாநகரை சேர்ந்த பழனியப்பனின் மனைவி இந்திரா (வயது 30). இவர், தனது 6 வயது மகனான பவினுடன் மொபட்டில் அம்மையாபட்டியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரிமளம் ரோட்டில் சென்ற போது ஒரு லாரி, மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இந்திரா படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவரது மகன் பவினும் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com