பெண் மாயம்

வி.கைகாட்டியில் பெண் மாயமானார்.
பெண் மாயம்
Published on

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவரது மனைவி கோகிலா (30). இவர்களுடைய மகள் ரேஷ்மா (13), மகன் வெற்றிவேல் (10). இந்தநிலையில் கோகிலா தனது மகன் மற்றும் மகளுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் பல்வேறு இடங்களில் அவர்களை தேடிப்பார்த்தார். இந்தநிலையில் ரேஷ்மா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கோகிலா மட்டும் மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகிலாவை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com