35 பவுன் நகையுடன் பெண் மாயம்

சாத்தூர் அருகே 35 பவுன் நகையுடன் பெண் மாயம் ஆனார்.
35 பவுன் நகையுடன் பெண் மாயம்
Published on

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சாந்தி தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி 35 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்த எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com