பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அண்ணன், தம்பி போக்சோவில் கைது

டியூசன் சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு அண்ணன், தம்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கண்ணகி நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், "எனக்கு 15 வயது இருக்கும்போது, டியூசன் சென்ற இடத்தில் இருந்த பிராங்கிளீன் ராஜா என்பவர், காதலிப்பதாக கூறி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதை அவரது சகோதரர் விக்டர் லிபின் ராஜாவிடம் கூறினேன். அவர் தம்பியை அழைத்து கண்டிப்பதற்கு பதில், அவரும் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து விலகி, திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தவறாக பேசுவதுடன் மீண்டும் என்னை தவறான உறவுக்கு அழைக்கின்றனர். வர மறுத்தால், உன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கண்ணகி நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சோழிங்கநல்லூரை சேர்ந்த விக்டர் லிபின் ராஜா (42 வயது), பிராங்கிளீன் ராஜா (38 வயது) ஆகியோரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com