பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம
கோப்புப்படம
Published on

சென்னை,

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் ஆவார்.

முன்னதாக பணியில் இருந்து விலகிய அந்த பெண், அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சக்திவேல், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

காவல் துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com