ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஐ.டி. ஊழியர் கைது

ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஓடும் ரெயிலிலேயே சத்தம் போட்டு உள்ளார்.
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஐ.டி. ஊழியர் கைது
Published on

ஈரோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 33 வயது பெண் யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் ஈரோட்டை கடந்து திருப்பூரை நோக்கி பெருந்துறை பகுதியில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெண் தூங்கிக்கொண்டு இருந்த படுக்கையின், மேல் படுக்கையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நிஜாமுதீன் (38) என்பவர் இருந்தார். அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஓடும் ரெயிலிலேயே சத்தம் போட்டு உள்ளார். பின்னர் ரெயில் கோழிக்கோடு சென்ற பிறகு, அங்குள்ள ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து கோழிககோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், நிஜாமுதீனை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே திருமணமான நிஜாமுதீன் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்பதும், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com