விஷம் குடித்து பெண் தற்கொலை

மதுக்கூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

மதுக்கூர்;

மதுக்கூர் அருகே அத்திவெட்டி கண்டியன்தெருவில் தனியாக வசித்து வந்தவர் தவசுமணி(வயது74). சம்பவத்தன்று இவரை விஷ வண்டு கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட தவசுமணி வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தா. இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com