விஷம் குடித்து பெண் தற்கொலை

திருவையாறு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள கீழப்புனவாசல் கீழத்தெருவை சேர்ந்த காந்திமதி (வயது47). இவருக்கு சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் இதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். சம்பவத்தன்று காந்திமதிக்கு நெஞ்சுவலி அதிகமானதால் வலி தாங்கமுடியாமல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தா. உடனே அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காந்திமதி இறந்தார்.இது குறித்து காந்திமதியின் கணவர் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com