தீக்குளித்து பெண் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

முத்துப்பேட்டை;

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தொண்டியக்காடு முனாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ரம்யா(வயது35). குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரம்யா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com