ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் - குழந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்ட சோகம்


ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் - குழந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்ட சோகம்
x

கோப்புப்படம் 

புதுக்கோட்டையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த பெண் தனது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பூவரசங்குடி பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ஸ்ரீகா (24 வயது). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் தன்சிகா என்ற பெண் குழந்தை இருந்தது. சரத்குமார் சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீகா அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு நேற்று வீட்டினுள் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது குழந்தை தன்சிகா வாசற்படி அருகே உடலில் காயங்கள் ஏதுவுமின்றி இறந்து கிடந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் மனவேதனையில் குழந்தை தன்சிகாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, ஸ்ரீகா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

1 More update

Next Story