தீக்குளித்த பெண் சாவு

குடும்ப பிரச்சினையால் தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார்
தீக்குளித்த பெண் சாவு
Published on

நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன். அவருடைய மனைவி சித்ரா (வயது 40). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சித்ரா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com