

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்கள் மாயமானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான பெண்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் பாளையத்தை சேர்ந்த ஹரி (23) என்பவர் தனது மனைவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் எர்ரஅள்ளியை சேர்ந்த திருமலை (20) என்பவர் மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் 26 வயது பெண். திருமணம் ஆனவர். 8-ந் தேதி வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவிலலை. இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.