"கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்ததாக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
Published on

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கூறி இருப்பதாவது;

"பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." இவ்வாறு அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com