கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
Published on

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை மஜித் தெருவை சேர்ந்த செல்வம் மனைவி ஜெயலட்சுமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து பூஜை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை ஜெயலட்சுமி பூஜைக்காக தண்ணீர் எடுக்க சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் வெங்கடேசன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com