

சென்னை,
தவெக ஆட்சியில் தமிழ்நாடு ‘வைஸ் சிட்டி’ ஆகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதற்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.
தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட் நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?.
பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!.. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?. இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.