தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து கோட்டூர் ஊராட்சி பெண்கள் நேற்று திடீர் என கோட்டூர் எடையார்பாக்கம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி, சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோட்டூர்-எடையார்பாக்கம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com