

செங்கம்
செங்கத்தை அடுத்த அந்தனூர் அருகே உள்ள துரிஞ்சாபுரம் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுப்பதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகவும்
அதனால் 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கீட்டில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது.
உண்மையாக வறுமைக்கோட்டிற்கு உள்ளவர்கள் பெயர் பட்டியலில் இல்லை. இதனால் எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதில்லை என அவர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.