குடிநீர் கேட்டு பெண்கள் 'திடீர்' சாலை மறியல்

வள்ளியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பெண்கள் 'திடீர்' சாலை மறியல்
Published on

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த ஒட்டகாரன்குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம், இந்திரா காலனி, திருமலாபுரம் கிராம பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக கிராம மக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆ.திருமலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com