தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

முத்தூர்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள புளியங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் கார்த்தி என்பவரின் மனைவி மஞ்சு என்கிற யசோதா (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். கணவன் மனைவியான கார்த்தி, மஞ்சு என்கிற யசோதா ஆகிய இருவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பதிகளான கணவன், மனைவிக்கிடையே கடந்த 10 நாட்களாக குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மஞ்சு என்கிற யசோதா கடந்த 10- ந் தேதி வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தகவல் அறிந்த கார்த்தி குடும்பத்தினர் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த மஞ்சு என்கிற யசோதாவை மீட்டு முத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற மஞ்சு என்கிற யசோதா மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மஞ்சு என்கிற யசோதா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com