வீர தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
வீர தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சுதந்திர தின விழாவில் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு எந்த துறையும் சேர்ந்த துணிகர செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் எவரேனும் இருந்தால் விருதுக்கான விண்ணப்பம், விவரங்களை தமிழக அரசு இணையதளத்தில் htttps://awards.tn.gov.in என்பதில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இவ்விருதுக்கான உரிய ஆவணங்கள் மற்றும் சுய விவரத்தை கருத்துகளை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நாளைக்குள் (சனிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com