நம்பி வாக்களித்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை - தவெகவை விமர்சித்த மேயர் பிரியா

7 வயது 8 வயது சிறுமிகள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக மேயர் பிரியா பேசியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை மேயர் பிரியா விமர்சனம்
Published on: 

சென்னை,

தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை என மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.

விமர்சனம்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்.பி.கனிமொழி, கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்.பி அப்துல்லா, சென்னை மேயர் பிரியா, முன்னாள் சட்டமன்ற அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மேயர் பிரியா தவெக ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :-

முதல் - அமைச்சர் ஆனால் உங்கள் பையன் விஜி, உங்க அண்ணன் விஜி, உங்க தம்பி விஜி அப்டினு சொன்னாரு, ஆனால் தற்போது 7 வயது 8 வயது சிறுமிகள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார்கள். அப்போது எங்க போனீங்க இந்த “சினிமாவில் வர மாதிரி நேப்பியர் பிரிட்ஜ் கீழ கயிறு கட்டி தொங்க விடுவாங்க” என நினைத்து உங்களுக்கு நம்பி வாக்களித்த மக்களுக்கு ஒரு சிறிய பாதுகாப்பு கூட இல்லை. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவுக்கு தமிழக அரசை நடத்தி வருகிறீர்கள். தவெக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா வேறோரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது ரீல்ஸ் போட்டு ஆட்சியை பிடித்து விட்டோம் என தெரிவித்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் எங்களுக்கு ரீல்ஸ் போட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு தலைவர் இருக்காரு, அக்கா இருக்காங்க, சின்னவர் இருக்காரு எங்களுக்கு கொள்கை இருக்கு என விமர்சித்து பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com