டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை

போடி அருகே, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் முற்றுகை
Published on

போடி அருகே உள்ள வினோபாஜி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வருகிற மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக 2 கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com