மகளிர் கூட்டுறவு தொழில் சங்க ஆலோசனை கூட்டம்

மன்னார்குடியில் மகளிர் கூட்டுறவு தொழில் சங்க ஆலோசனை கூட்டம்
மகளிர் கூட்டுறவு தொழில் சங்க ஆலோசனை கூட்டம்
Published on

மன்னார்குடி:

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் மகளிர் கூட்டுறவு தொழில் பயனுறுதி சங்க மாவட்ட நிர்வாகக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜீவிதா தனமணிராஜா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவிசேட்டு வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் மாநிலத்தலைவர் ராசபாலன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கங்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மேலும் வருகிற 30-ந்ததி (வியாழக்கிழமை) கூத்தாநல்லூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் மகளிர் கூட்டுறவு தொழில் பயனுறுதி சங்க உறுப்பினர் உறுதிஏற்பு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com