மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா

சந்தவாசலில் மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா
Published on

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது.

நடமாடும் மருத்துவ அலுவலர் அனிதா, போளூர் வட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ.ஜோசபின் ஹெப்சிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் குழு தன்னார்வலர் அபர்ணா வரவேற்றார்.

இதில் போளூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கே.புனிதா, ஓய்வு பற்ற வன அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டுக்கு சிறப்பு சேவை செய்த தன்னார்வலர்கள் 8 பேருக்கு சால்வை அணிவித்து கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது..

இதில் மகளிர் குழுவினர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் வடிவேலு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com