மகளிர் தின விழா கொண்டாட்டம்

கடையநல்லூரில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழா கொண்டாட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் மங்களபுரத்தில் செயல்பட்டு வரும் மருதம் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் உள்ளாட்சி நிதி தணிக்கை அதிகாரி பேபிராணி, நல்லாசிரியை திரேஸ் விஜயராணி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் மனோகர் வாழ்த்தி பேசினார். விழாவில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருதம் பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com