மகளிர் தின விழா... கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின விழா... கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தின விழா கெண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அ.தி.மு.க. பெதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றதாகவும், நாட்டுக்கு நல்லது செய்தவர்களை பிரதமர் பாராட்டி பேசுவதில் எந்த தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com