மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு


மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு
x

கோப்புப்படம்

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை

பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கி காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story