உசிலம்பட்டி அருகே பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

உசிலம்பட்டி அருகே பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்தனர்
உசிலம்பட்டி அருகே பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா தொடங்கி 3 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் நாள் திருவிழாவான அன்று 200-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேலும் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்பிற்காக சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சொந்த ஊருக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com