விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை: உதயநிதி ஸ்டாலின்


விண்ணப்பித்த அனைவருக்கும்  மகளிர் உரிமைத்தொகை: உதயநிதி ஸ்டாலின்
x

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாகவும் பேசி இருக்கிறார். இந்த விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story