தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தம்மம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
Published on

தம்மம்பட்டி

தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 4 நாட்களாக கோனேரிப்பட்டி பகுதியில் தூய சலேத் அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்று வந்தது. இதற்காக அப்பகுதியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில், தண்ணீர் இல்லாமல் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கோனேரிப்பட்டி கிழக்கு காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை 8 மணி அளவில் தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கோனேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரிதா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com