திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பவிதில் கூறியிருப்பதாவது:-

திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்-அமைச்சருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது திமுக ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மை காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com