நசரத்பேட்டை அங்கன்வாடி மையத்தில் கம்பளி பூச்சிகள் - குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்ற பெற்றோர்

நசரத்பேட்டை அங்கன்வாடி மையத்தில் கம்பளி பூச்சிகள் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
நசரத்பேட்டை அங்கன்வாடி மையத்தில் கம்பளி பூச்சிகள் - குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்ற பெற்றோர்
Published on

பூந்தமல்லி ஒன்றியம், நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அங்கன்வாடி மையத்தில் தங்களது பிள்ளைகளை விடுவதற்கு வந்த பெற்றோர்கள் அங்கு கம்பளி பூச்சிகள் அதிக அளவில் இருப்பதை கண்டு பயந்து தங்களது பிள்ளைகளை அங்கன்வாடி மையத்தில் விடாமல் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

மேலும், கம்பளி பூச்சிகளை அகற்றுவதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பெற்றோர் கண்டித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கம்பளி பூச்சிகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com