அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகம் அச்சிடும் பணி தீவிரம்

அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பாடப்புத்தகங்கள் அச்சிடம் பணி சிவகாசி அச்சகங்களில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகம் அச்சிடும் பணி தீவிரம்
Published on

சிவகாசி, 

அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பாடப்புத்தகங்கள் அச்சிடம் பணி சிவகாசி அச்சகங்களில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

பாடப்புத்தகம்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிப்பாடப்புத்தகங்கள் கடந்த காலங்களில் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் அச்சடிக்கப்பட்டு வந்தது.

இதனால் சிவகாசியில் உள்ள பெரும்பாலான அச்சகங்களுக்கு இந்த பணி கிடைக்காமல் தொழில் அதிபர்களும், அச்சக பணியில் உள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் வினியோகம் செய்ய தேவையான 3 கோடியே 50 லட்சம் பாடப்புத்தகங்கள் சிவகாசியில் உள்ள 45 அச்சகங்களில் இரவு, பகலாக தயாராகி வருகிறது.

மகிழ்ச்சி

இதனால் அச்சக அதிபர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக வெளி மாநிலங்களில்தான் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன் வெளிமாநிலங்களுக்கு பாடப்புத்தகம் அச்சிட அனுமதி வழங்கப்படாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த கல்வி ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அச்சக அதிபர் ஒருவர் கூறியதாவது, "பாடப்புத்தகம் அச்சிடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. போதிய மின்வினியோகம் உள்ளதால் எவ்வித பாதிப்பும் இன்றி பள்ளிகள் திறப்பதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com