20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கோவிலில் கண்ணாடி பதிக்கும் பணியின் போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மேற்குவங்க வாலிபர் பலியானார்.
20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

சென்னை,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் அசன் அலி (வயது 26). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்தார். அசன் அலி, நேற்று முன்தினம் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கோவிலின் மேலே கண்ணாடி பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி உயரத்தில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அசன் அலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூக்கு வழியாக ரத்தம் வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், அசன் அலியை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அசன் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com