பழைய மாமல்லபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்

மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கட்டுமான பணியில் 2 முக்கிய மைல்கல்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மொத்தம் 582 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட யூ-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

தற்போது அனைத்து அஸ்திவார தூண்கள் பணிகளும், யு-கார்டர் தயாரிப்பு பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டிடத்தின் 3-வது வழித்தட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் பழைய மாமல்லபுரம் சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com