சென்னையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
Published on: 

சென்னை,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மாதவரம் மண்டலம் வார்டு 25-க்குட்பட்ட மேதா நகர் சாலை, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-35-க்குட்பட்ட கே.கே.டி நகர், 3-வது பிரதான சாலை, முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை, அம்பத்தூர் மண்டலம், வார்டு 84-க்குட்பட்ட சிட்கோ 7-வது தெரு, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-129க்குட்பட்ட என்.எஸ்.கேலேன், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-147க்குட்பட்ட கிருஷ்ணா நகர் 27-வது தெரு,

பெருங்குடி மண்டலம், வார்டு 182-க்குட்பட்ட நேரு நகர், 1-வது குறுக்கு தெரு, திரு.வி.க 1-வது குறுக்கு தெரு, ஹரிவர்தன் தெரு, வார்டு 183-க்குட்பட்ட வி.ஜி.பி 1-வது பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தார்க்கலவை மற்றும் சிமெண்ட் கலவைக் கொண்டு சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X