திருத்தணி முருகன் கோவிலில் மாடவீதியை விரிவாக்கும் பணி விரைவில் தொடங்கும்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள மாடவீதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் மாடவீதியை விரிவாக்கும் பணி விரைவில் தொடங்கும்
Published on

திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர்.

மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள ஐந்து கடைகள் கடந்த 1-ந் தேதி நடைப்பெற்ற இந்த ஆண்டிற்கான கோவில் பொது ஏலத்திற்கு அறிவிக்கவில்லை. இதுக்குறித்து கோவில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் மலைக்கோவில் பக்தர்களின் நலனுக்காவும், நிர்வாக வசதிக்காவும் மலைமேல் பெருந்திட்ட வளாகம் அமைக்கபட உள்ளது. மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது.

இது குறித்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் ஆணையரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com