

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் நேற்றிரவு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் நேற்று (புதன்கிழமை) இரவு அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மிக்கல் விற்பனை செய்யும் தொழிலாளி விஷ்ணு (26 வயது) என்பவர் சிறுமியின் வாயைப் பொத்தி கடத்தி சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நடந்ததை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த விஷ்ணு தப்பியோட முயன்றார். அப்போது கீழே விழுந்து அவர் காலில் முறிவு ஏற்பட்டது.
போலீசார் விஷ்ணுவை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.