மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவியை கொன்ற தொழிலாளி கைது

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவியை கொன்ற தொழிலாளி கைது
Published on: 

சென்னை,

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (28). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சுதா மேலும் மது கேட்டுள்ளார். அதற்கு லோகநாதன், டாஸ்மாக் கடை மூடிவிடும் என கூறினார். அதற்கு சுதா, 'பிளாக்கில் வாங்கி வா' என கேட்டு தொல்லை கொடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், துப்பட்டாவால் சுதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் மது போதையில் வீட்டிலேயே தூங்கிவிட்டார். நேற்று காலை எழுந்த போதுதான் சுதா இறந்து விட்டது தெரியவந்தது. உடனே வீட்டை பூட்டிவிட்டு தரமணி பகுதியில் சுற்றித்திரிந்த லோகநாதன், மாலையில் சைதாப்பேட்டை சென்று தனக்குத் தெரிந்த நபரிடம் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சைதாப் பேட்டை சென்று லோகநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com