சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

2 சிறுமிகளும் தப்பித்து, தங்களது பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளனர்.
சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
Published on

சேலம்,

சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுமிகளும் அவரிடம் இருந்து தப்பித்து தங்களது பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளனர். இதை கேட்டு கோபம் அடைந்த சிறுமிகளின் பெற்றோர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தமிழரசனை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழரசன், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com