

சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தார்.