நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனாலும், அவருக்கு உடல்நிலை சீராகவில்லை. இதனால் மனமுடைந்த சிவகுமார் சம்பவத்தன்று நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com