ராஜாக்கமங்கலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலைசெய்து காண்டார்.
ராஜாக்கமங்கலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஸ்ரீபாரத் (29). தொழிலாளி. சம்பவத்தன்று ஸ்ரீபாரத் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்து போன ஸ்ரீ பாரத்துக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-

X

Daily Thanthi
www.dailythanthi.com